செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு!…

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு!…

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு!… post thumbnail image
புதுடெல்லி:-சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக கச்சா எண்ணெய் விலையில் தொடர்ந்து வீழ்ச்சி ஏற்பட்டப்படி உள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் கணிசமாக குறைந்தன.

இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மேலும் வீழ்ச்சி ஏற்பட்டது. அது போல டாலருக்கான நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் சிறப்பாக இருந்தது. இதனால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. டெல்லி விற்பனை விலை நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 80 காசு குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 30 காசு குறைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இதுவரை 62 ரூபாய் 75 காசுகளாக விற்பனையான ஒரு லிட்டர் பெட்ரோல் 85 காசுகள் விலை குறைந்து இனி 61 ரூபாய் 90 காசுகளுக்கு விற்பனையாகும். 51 ரூபாய் 61 காசுகளாக விற்பனையான ஒரு லிட்டர் டீசல் ஒரு ரூபாய் 40 காசுகள் விலை குறைந்து இனி 50 ரூபாய் 21 காசுகளுக்கு விறபனையாகும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி