இந்தியாவிற்கு யுரேனியம் விநியோகிக்க கனடா சம்மதம்!…

விளம்பரங்கள்

ஒட்டாவா:-கனடாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அந்த நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் உடன் நடத்திய பேச்சு வார்த்தையின் முடிவில் இந்த ஆண்டு முதல் அடுத்த 5 ஆண்டுகளுக்கு 3000 மெட்ரிக் டன் யுரேனியம் வழங்க கனடா சம்மதித்து உள்ளது. இதன் மொத்த மதிப்பு 254 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

இந்தியாவிற்கான மின்சார தேவைகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கையின் வெளிப்பாடாகவும் இது கருதப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவிற்கு யுரேனியம் வழங்கும் மூன்றாவது நாடாக கனடா உள்ளது. இதற்கு முன் ரஷ்யா மற்றும் கஜகஸ்தான் ஆகிய நாடுகள் இந்தியாவிற்கு யுரேனியம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: