அக்னி 3 ஏவுகணை சோதனை வெற்றி!…

விளம்பரங்கள்

புவனேஸ்வர்:-தரையிலிருந்து பாய்ந்து தரையில் உள்ள இலக்கை தாக்கும் அக்னி 3 ஏவுகணை, ஒடிசாவில் உள்ள பத்ரக் மாவட்டத்தின் தம்ரா கடற்பகுதியான வீலர் தீவிலிருந்து இன்று காலை 9.52 மணியளவில் ஏவப்பட்டது. இன்றைய சோதனையில் 3000 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்தை நோக்கி பாய்ந்த ஏவுகணை 20 நிமிட பயணத்தில் இலக்கை துல்லியமாக தாக்கியது. 5000 கி.மீ வரை அணு ஆயுதங்களை சென்று தாக்கும் வகையில் இந்த அக்னி ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது.

1.5 டன் எடையுள்ள அணு ஆயுதங்களை சுமந்து சென்று இலக்கை தாக்கும் சக்தி கொண்டது அக்னி 3 ஏவுகணை. 16 மீட்டர் நீளமும், 48 டன் எடையும் கொண்டதாக இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் எப்பகுதியில் இருந்தும் இந்த ஏவுகணையை ஏவ முடியும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: