விஜய் அவார்ட்ஸ் இறுதி சுற்றில் இடம் பெற்றுள்ள படங்கள் – ஒரு பார்வை…

விளம்பரங்கள்

தமிழ் சினிமா கலைஞர்கள் அதிகம் ஆவலுடன் எதிர்பார்க்கும் விருது திருவிழாவான விஜய் அவார்ட்ஸ் விழா வருகிற 25ந் தேதி நடக்க இருக்கிறது. இதற்காக கே.பாக்யராஜ், கே.வி.ஆனந்த், பால்கி, நடிகை நதியா, யூகி சேது தலைமையிலான நடுவர் குழுவினார் விருதுக்குரிய படங்களை தேர்வு செய்து வருகிறார்கள். இதற்கிடையில் சிறந்த கலைஞர்களை தேர்வு செய்ய நேயர்களிடம் இணைய தளம் மூலம் வாக்கெடுப்பும் நடத்தி வருகிறது விஜய் டி.வி. சிறந்த படங்களுக்கான போட்டியில் அரண்மனை, கோலிசோடா, கத்தி, வீரம், வேலையில்லா பட்டதாரி படங்கள் இருக்கிறது.

ரசிகர்களுக்கு பிடித்த நடிகர்களுக்கான போட்டியில் ரஜினி (லிங்கா), அஜீத் (வீரம்), விஜய் (கத்தி), தனுஷ் (வேலையில்லா பட்டதாரி), சூர்யா (அஞ்சான்) ஆகியோர் மோதுகிறார்கள். ரசிகர்களுக்கு பிடித்த சிறந்த நடிகைகளுக்கான போட்டியில் ஹன்சிகா (மான் கராத்தே), நயன்தாரா (இது கதிர்வேலன் காதல்), சமந்தா (கத்தி), ஸ்ரீதிவ்யா (ஜீவா), ஸ்ருதிஹாசன் (பூஜை) உள்ளனர். சிறந்த இயக்குனர்களுக்கான இறுதிப் பட்டியலில் ஏ.ஆர்.முருகதாஸ் (கத்தி), ஹரி (பூஜை), கே.எஸ்.ரவிகுமார் (லிங்கா), சிவா (வீரம்) சுந்தர்.சி. (அரண்மணை) உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: