சென்டிமென்ட் கதையில் நடிகர் அஜித்!…

விளம்பரங்கள்

சென்னை:-திருப்பாச்சி, சிவகாசி, வேட்டைக்காரன், துப்பாக்கி, ஜில்லா என்று ஆக்சன் கலந்த சென்டிமென்ட் கதைகளில் அதிகமாக நடித்திருப்பவர் விஜய். அதனால் விஜய் படங்களில் தங்கச்சி கேரக்டருக்கு அதிக காட்சிகளும் கொடுப்பார்கள். அந்த வரிசையில், தற்போது வீரம் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படமும் தங்கை செண்டிமென்ட் கதையில் உருவாகிறது.

ஏற்கனவே வீரம் படத்தில் தம்பி சென்டிமென்ட் கதையில் நடித்த அஜித், இந்த படத்தில் தங்கை சென்டிமென்ட் கதையில் நடிப்பதால், அவருக்கு ஒரு முன்னணி நடிகையை தான் தஙகையாக நடிக்க வேண்டும் என்று சில நடிகைகளுக்கு அழைப்பு விடுத்தார் டைரக்டர் சிவா. அந்த பட்டியலில் முதலிடம் பிடித்தவர் பிந்துமாதவி. ஆனால் அஜித் படம் என்றதும் ஓடோடிச்சென்றவருக்கு தங்கை வேடம்தான் என்றதும் பெரிய அதிர்ச்சியாகி விட்டது.

அதனால் போன வேகத்திலேயே ரிட்டனாகி விட்டார். அதையடுத்து நித்யாமேனனிடம் பேசினார்கள் அதுவும் ஒர்க்அவுட்டாகவில்லை. அதனால் இப்போது ஸ்ரீதிவ்யாவிடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர் இன்னமும் தனது முடிவை தெரிவிக்கவில்லையாம். ஆனபோதும் ஓகே சொல்லி விடுவார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: