உலக கோப்பை கால்பந்து: கடினமான தகுதி சுற்றில் இந்தியா!…

விளம்பரங்கள்

கோலாலம்பூர்:-உலக கோப்பை கால்பந்து போட்டி 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடக்கிறது. இந்த போட்டிக்கான தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. ஆசிய கண்டத்திற்கான 2-வது கட்ட தகுதி சுற்று போட்டி அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது.

இதில் இந்திய அணி சவாலான பிரிவில் (டி பிரிவு) இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் ஈரான், ஓமன், துர்க்மெனிஸ்தான், குயாம் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த அணிகளுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் இந்திய அணி மோதும். உலக தரவரிசையில் 147-வது இடம் வகிக்கும் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஜூன் 11-ந்தேதி ஓமனை எதிர்கொள்கிறது.

இந்திய பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டன்டைன் கூறும் போது, ஈரான், ஓமன் அணிகளின் பலம் குறித்து விளக்கமாக சொல்ல வேண்டியதில்லை. தரவரிசையில் ஆசிய அளவில் ஈரான் முன்னணியில் இருக்கிறது. ஓமன் மிகவும் வலுவான அணி. எல்லா ஆட்டங்களும் கடினமாக இருக்கும் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: