செய்திகள்,திரையுலகம் தமிழ் புத்தாண்டில் ஒளிபரப்பாகும் படங்கள் – ஒரு பார்வை!…

தமிழ் புத்தாண்டில் ஒளிபரப்பாகும் படங்கள் – ஒரு பார்வை!…

தமிழ் புத்தாண்டில் ஒளிபரப்பாகும் படங்கள் – ஒரு பார்வை!… post thumbnail image
முன்பெல்லாம் பண்டிகை காலங்களில் தியேட்டர்களுக்குதான் புதுப்படங்கள் படையெடுக்கும். ஆனால் இப்போது நிலைமை தலைகீழ். முன்னணி நாயகர்களின் படங்களும், லேட்டஸ்ட் வரவுகளும்தான் விழாக்காலங்களில் டிவிகளில்தான் அதிகமாக இடம்பிடிக்கின்றன. அந்தவகையில் வரும் 14ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு முன்னணி தமிழ் சேனல்களில் முக்கிய படங்களை ஒளிபரப்பவிருக்கிறார்கள். இளைய தளபதி விஜய் நடித்து வெளியாகி ஹிட்டான திரைப்படம் கத்தி.

விவசாயிகள், கிராம மக்கள் படும் கஷ்டங்களை யதார்த்தமாக எடுத்துச் சொன்ன இந்த திரைப்படம், ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. ஜில்லா திரைப்படத்தில் சற்று சறுக்கிய விஜய், கத்தி படத்தால் அதை ஈடு செய்தார். லைகா தயாரிப்பில், முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். காமெடி கேரக்டரில் சதீஷ் நடித்திருந்தார். இந்த பட்டியலில் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி வெளியான தனுஷின் ‘அனேகன்’ படமும் இடம் பிடித்திருப்பது கோடம்பாக்கத்தை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. சன் டிவியில் தனுஷ் நடித்த அனேகன் திரைப்படம் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்தப்படம் தவிர வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம், நான் ஈ திரைப்படங்களும் ஒளிபரப்பாக உள்ளது. கே.டிவியில் இங்க என்ன சொல்லுது திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.

கலைஞர் டிவியில் சூர்யா நடித்த ரத்த சரித்திரம், பரத் நடித்த கில்லாடி திரைப்படமும், ராகவா லாரன்ஸ் நடித்த முனி திரைப்படமும் ஒளிபரப்பாகிறது. விஜய் டிவியில் புத்தம் புதிய திரைப்படமான சித்தார்த் நடித்த காவியத்தலைவன் திரைப்படம் ஒளிபரப்பாகிறது. அன்றைய தினம் கார்த்தி நடித்த மெட்ராஸ் திரைப்படமும் ஒளிபரப்பாக உள்ளது. ஏப்ரல் 14 புத்தாண்டு ஸ்பெஷலாக காபி வித் டிடியில் ஓகே கண்மணி குழுவினர் பேட்டி ஒளிபரப்பாக உள்ளது. வைரமுத்து, மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர். தமிழ் புத்தாண்டு நாளன்று ஜீ தமிழ் டிவியில் கிருஷ்ணா நடித்த வானவராயன், வல்லவராயன் திரைப்படமும், ஜீவா நடித்த யான் திரைப்படமும் ஒளிபரப்பாக உள்ளது.

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் புத்தாண்டுப் படங்களின் பட்டியல் :-

1. கத்தி – ஜெயா டிவி
2. அனேகன் – சன் டிவி
3. கில்லாடி – கலைஞர் டிவி
4. காவியத்தலைவன், மெட்ராஸ், ஜீவா – விஜய் டிவி

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி