செய்திகள்,திரையுலகம் கானா பாடகராகும் நடிகர் விஜய்!…

கானா பாடகராகும் நடிகர் விஜய்!…

கானா பாடகராகும் நடிகர் விஜய்!… post thumbnail image
சென்னை:-நடிகர் விஜய் தன்னுடைய படங்களில் ஒரு பாடலை பாடுவதை தற்போது வழக்கமாக கொண்டுள்ளார். அதுபோல், சமீபத்தில் விஜய் நடிப்பில் வந்த ‘துப்பாக்கி’, ‘தலைவா’, ‘ஜில்லா’, ‘கத்தி’ ஆகிய படங்களில் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த பாடல்கள் விஜய்யின் குரலுக்காகவே பெரிய அளவில் வெற்றி பெற்றன. இந்நிலையில், தற்போது விஜய் நடித்து வரும் ‘புலி’ படத்திலும் விஜய் ஒரு பாடலை பாடவிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து அட்லி இயக்கும் புதிய படத்திலும் விஜய் பாடவிருக்கிறாராம்.

இந்த படத்தில் விஜய் பாடும் பாடல் கானா பாடல்களை போன்று அதிரடி டியூனில் உருவாக இருக்கிறதாம். இதனால், அட்லி படத்தின் மூலம் கானா பாடகராகவும் உருவெடுக்கவிருக்கிறார் விஜய். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவிருக்கிறார். இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்படாத நிலையில், இப்போதே இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைக்கத் தொடங்கிவிட்டார் ஜி.வி.பிரகாஷ். சமீபத்தில்கூட கோவாவில் இப்படத்தின் பாடல் பதிவை தொடங்கியுள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் ஏற்கெனவே விஜய் நடிப்பில் வெளிவந்த ‘தலைவா’ படத்திற்கும் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் விஜய் பாடிய ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’ பாடல் பெரிய அளவில் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி