செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் யார்?…

இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் யார்?…

இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் யார்?… post thumbnail image
புதுடெல்லி:-இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருப்பவர் டங்கன் பிளட்சர். 2011–ம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு அவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். கிர்ஸ்டன் விலகியதை தொடர்ந்து ஜிம்பாப்வேயை சேர்ந்த பிளட்சர் பயிற்சியாளர் ஆனார். வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரில் மோசமான தோல்வியை தழுவிய போது பிளட்சர் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார். அவர் நீக்கப்படவில்லை. அவரது முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் முன்னாள் கேப்டன் ரவிசாஸ்திரி அணியின் இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

66 வயதான பிளட்சரின் பதவி காலம் முடிவடைவதை தொடர்ந்து இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட உள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழு கூட்டம் கொல்கத்தாவில் வருகிற 26–ந்தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தில் பயிற்சியாளர் பற்றி விவாதிக்கப்படும். பிளட்சருக்கு பதிலாக புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.

புதிய பயிற்சியாளர் தேர்வின்போது ரவி சாஸ்திரியின் ஆலோசனையை கேட்கப்படும் என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தனர். தற்போது அணியில் இருக்கும் சஞ்சய் பாங்கர், பரத் அருண், ஸ்ரீதர் ஆகியோர் தங்களது பொறுப்பில் தொடர்வார்கள் என்று கூறப்படுகிறது. பிரவீண் ஆம்ரே பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்படலாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி