ஏர் கனடா விமானத்தின் பணிப்பெண்ணை கடித்த 87 வயது பாட்டி!…

விளம்பரங்கள்

கனடா:-ஜெர்மனியின் ப்ராங்பர்ட் நகரிலிருந்து கனடாவின் டொரண்டோவுக்கு 200 பயணிகளுடன் சென்ற ஏர் கனடா விமானத்தில் முதல் வகுப்பில் பயணித்த 87 வயதான பாட்டி விமான பணிப்பெண்ணை கடித்து வைத்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அட்லாண்டிக் கடலுக்கு மேலே விமானம் பறந்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்ததாக அயர்லாந்து பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பாட்டியின் மோசமான இந்த செய்கையை அடுத்து, அவரை பிடித்து வைத்த விமான பணியாளர்கள் விமானம் அயர்லாந்தின் மேற்கு கடற்கரையில் உள்ள ஷன்னோன் விமான நிலையத்திற்கு சென்றவுடன், அங்கிருந்த விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த அயர்லாந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: