செய்திகள் மரணமடைந்த 17 ஆண்டுகளுக்கு பின்பும் பாதுகாக்கப்படும் துறவியின் உடல்!…

மரணமடைந்த 17 ஆண்டுகளுக்கு பின்பும் பாதுகாக்கப்படும் துறவியின் உடல்!…

மரணமடைந்த 17 ஆண்டுகளுக்கு பின்பும் பாதுகாக்கப்படும் துறவியின் உடல்!… post thumbnail image
பீஜிங்:-சீனாவின் புத்த துறவியான வூ யுங்கிங், 17 வருடங்களுக்கு முன் மறைந்தபோதும் அவரது உடல் இன்று வரை கண்ணாடி பேழையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவரது முக உறுப்புகளும், முகத்தில் உள்ள தசைகளும், தலைமுடி மற்றும் தாடியும் இப்போதும் எவ்வித சேதமுமின்றி அப்படியே உள்ளது. அவர் தற்போது 102 வயதுடன் வாழ்ந்துக்கொண்டிருப்பதாக அவரது பக்தர்கள் நம்புகின்றனர்.

மத்திய சீனாவின் அன்யாங் நகரில் உள்ள லிங்குவான் புத்த விகாரையில், தவக்கோலத்தில் அமர்ந்த நிலையில் உள்ள துறவி யூ யுங்கிங் தங்க அங்கியும், மணிகளும் அணிந்துள்ளார்.
யுங்கிங்கிற்கு 15 வயதிருக்கும் போது அவரது பெற்றோர் மரணமடைந்ததாக ஆவணங்கள் கூறுகின்றன. இதை தொடர்ந்து துறவியாக முடிவு செய்த யுங்கிங், ஷான்க்சி யனான் குயிங் ஹுவா விகாரைக்கு சென்றார்.
அங்கேயே இறுதி வரை இருந்த அவர், 1998 ஆம் ஆண்டில் மரணமடைந்தார். தங்களது குரு யுங்கிங்கின் உடலை பாதுகாக்க நினைத்த சீடர்கள், அவரது உடலை தாமரை நிலையில் வைத்து பெரிய பீங்கான் குவளையில் அடைத்தனர். பின்னர் அங்கிருந்து லிங்குவான் விகாரைக்கு கொண்டு வரப்பட்ட அவரது உடல், கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டது. ஏறத்தாழ 17 வருடங்களாக கண்ணாடி பேழைக்குள் இருக்கும் யுங்கின் முகம், இன்றும் சிதையாமல் இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

1990 ஆம் ஆண்டிலிருந்து புத்த துறவிகளின் உடலை மம்மிகளாக பாதுகாத்து வரும் சூ குவோஷெங் இதுபற்றி கூறுகையில், துறவிகளை மம்மிகளாக பதப்படுத்தி வைத்திருப்பதற்கு பெரிய பீங்கான் குவளைகள் பெரிதும் உதவுகின்றன என்றார். பீங்கான் குவளையில் வைக்கப்பட்ட உடலை பாதுகாக்கும் வகையில் தானியங்கள், மரத்துண்டுகள், நிலக்கரி மற்றும் சந்தனமரம் உள்ளே வைக்கப்படுவதாக கூறிய அவர், பீங்கான் குவளைக்குள் வைத்து மூடிய பின், 3 வருடங்களுக்கு பின் அது திறக்கப்படும்போது உடல் அழுகாமல் இருந்தால், அந்த துறவியின் உடல் தங்க முலாம் பூசப்பட்டு சிலையாக மாற்றப்படும் என்று அவர் தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி