விவாகரத்து செய்யாமல் 10 ஆண்களை திருமணம் செய்த பெண்!…

விளம்பரங்கள்

நியூயார்க்:-அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த பெண் லியானா கிறிஸ்டியானா பேரியன்டாஸ். இவர் ஒரு திருமண பிரியர். அவர் கண்ணில்பட்டு மனதுக்கு பிடித்த ஆண்களை அதிரடியாக திருமணம் செய்தார். அது போன்று 10 ஆண்களை ஊரறிய திருமணம் செய்து இருக்கிறார். அதில் ஒரு விசேஷம் என்னவென்றால் ஒருவரை கூட அவர் விவாகரத்து செய்யவில்லை.

இவர் தனது முதல் திருமணத்தை கடந்த 1999ம் ஆண்டு தொடங்கினார். ஆனால் அவருக்கு 2002ம் ஆண்டு பிசியான ஆண்டாக அமைந்தது. காதலர் தினத்தன்று லாஸ்ஐலேண்டு பகுதியை சேர்ந்த நபரை முதலாவதாக திருமணம் செய்தார். அதன் பின்னர் 15 நாட்களுக்கு பிறகு ராக் ஐலேண்டு பகுதியை சேர்ந்தவரையும், அதையடுத்து 13 நாட்களுக்கு பின் 2 பேரையும் திருமணம் செய்தார். தொடர்ந்து இது போன்று 10 திருமணங்கள் செய்தார்.

அந்த ஆண்களுடன் தேன்நிலவு கொண்டாடினார். தற்போது அவருக்கு 39 வயது ஆகிறது. இவரது கணவர்களின் கடைசி பெயர்கள் ஜெர் பிரில், அல்லாம், ரஹ்மான், கொரிடிஷ், சாக்டெப், ராஜ்புத், கெய்தா போன்றவையாகும். இந்நிலையில் கடந்த 2010–ம் ஆண்டு இவர் மீது பல திருமணங்கள் செய்து மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: