செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் ராமலிங்க ராஜுவுக்கு 7 வருட சிறை – 5 கோடி ரூபாய் அபராதம்!…

ராமலிங்க ராஜுவுக்கு 7 வருட சிறை – 5 கோடி ரூபாய் அபராதம்!…

ராமலிங்க ராஜுவுக்கு 7 வருட சிறை – 5 கோடி ரூபாய் அபராதம்!… post thumbnail image
ஐதராபாத்:-சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் வரவு-செலவு கணக்கில், மோசடி செய்த வழக்கில் அந்நிறுவனத்தின் நிறுவனரான ராமலிங்க ராஜு உள்பட 10 பேருக்கும், 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இன்று காலை 10 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த நீதிமன்றம், தண்டனையை பிற்பகலில் வழங்குவதாக அறிவித்தது. 7 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ள ராஜு ஏற்கனவே 32 மாதங்களாக சிறையில் உள்ளதால், இன்னும் 52 மாதங்கள் சிறையில் கழிக்க வேண்டும்.

முன்னதாக சத்யம் நிறுவன கணக்குகளில், பல ஆண்டுகளாக மோசடி செய்து, லாபத்தை அதிகமாக காட்டி ஊழலில் ஈடுபட்டதாக பி. ராமலிங்க ராஜூ மீது கடந்த 2009-ம் ஆண்டு புகார் எழுந்தது. நாட்டின் மிகப்பெரிய கணக்கு மோசடி என கூறப்பட்ட இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. ராமலிங்க ராஜூ, அவரது சகோதரர்கள் ராம ராஜூ, சூரிய நாராயண ராஜூ, சத்யம் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி வண்ட்லமணி சீனிவாஸ் உள்ளிட்ட 10 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் ஐதராபாத் சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு விசாரணை நடத்தியது. சத்யம், தனது பங்குதாரர்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுத்தியதாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியது. 226 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 3 ஆயிரம் ஆவணங்கள் சான்றாவணங்களாக குறிக்கப்பட்டன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி