செய்திகள்,திரையுலகம் முடிவானது ‘விஜய் 60’ படத்தின் இயக்குனர்?…

முடிவானது ‘விஜய் 60’ படத்தின் இயக்குனர்?…

முடிவானது ‘விஜய் 60’ படத்தின் இயக்குனர்?… post thumbnail image
சென்னை:-நடிகர் விஜய் தற்போது சிம்பு தேவன் இயக்கத்தில் ‘புலி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஜய் பிறந்த நாளில் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இப்படத்தை அடுத்து அட்லி இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய்.

கலைப்புலி எஸ்.தாணு இயக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா-எமி ஜாக்சன் ஆகியோர் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் 50-வது படமாக இப்படத்தில் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதத்தில் தொடங்க இருக்கின்றனர்.

இதன் பிறகு சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். சசிகுமார் தற்போது பாலா இயக்கத்தில் ‘தாரை தப்பட்டை’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடியவுள்ளது. அதன்பிறகு விஜய்யும் சசிகுமாரும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி