செய்திகள்,திரையுலகம் ‘விஜய் 59’ படத்தில் தேசிய விருது பாடகி!…

‘விஜய் 59’ படத்தில் தேசிய விருது பாடகி!…

‘விஜய் 59’ படத்தில் தேசிய விருது பாடகி!… post thumbnail image
சென்னை:-இயக்குனர் விஜய் இயக்கத்தில் வெளிவந்த ‘சைவம்’ படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘அழகே அழகு’ என்ற பாடலை பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணனின் மகள் உத்ரா பாடியிருந்தார். இந்த பாடலை பாடியதற்காக உத்ரா தேசிய விருதுக்கு தேர்வாகியிருக்கிறார். இந்நிலையில் உத்ரா, நடிகர் விஜய் நடிக்க இருக்கும் 59-வது படத்தில் ஒரு பாடல் பாடுகிறாராம். இந்த படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ்தான் இசையமைக்கிறார். அட்லி இயக்க இருக்கிறார்.

இதுகுறித்து உத்ரா கூறும்போது, நான் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகை. அவருடைய படத்தில் துள்ளலான பாடலை பாடுகிறேன் என்றார். விஜய் தற்போது ‘புலி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இப்படத்திற்கு பிறகு அட்லி இயக்கும் படத்தில் இணைவார் என கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி