செய்திகள் உளவு வேலைகளை அம்பலப்படுத்திய எட்வர்ட் ஸ்னோடெனுக்கு நியூயார்க்கில் சிலை!…

உளவு வேலைகளை அம்பலப்படுத்திய எட்வர்ட் ஸ்னோடெனுக்கு நியூயார்க்கில் சிலை!…

உளவு வேலைகளை அம்பலப்படுத்திய எட்வர்ட் ஸ்னோடெனுக்கு நியூயார்க்கில் சிலை!… post thumbnail image
நியூயார்க்:-அமெரிக்காவும் அதன் நெருங்கிய நட்பு நாடுகளும் சேர்ந்து பெரிய அளவில் உளவு வேலைகளில் ஈடுபட்டுவந்தன. இதில் பிற நாடுகள் மட்டுமல்லாமல் பொதுமக்களின் மின் அஞ்சல்கள், சமூக வலைதள நடவடிக்கைகள், தொலைபேசி உரையாடல்கள் யாகூ, கூகுள் போன்ற பெருநிறுவனங்களின் உதவியுடன் சேகரிக்கப்பட்டன. இதனால் அத்திட்டத்தில் வேலைபார்த்த தேசிய பாதுகாப்பு முகமையின் உறுப்பினர் எட்வார்ட் ஸ்னோடென் கோபம் அடைந்தது, இதனை வெளி உலகுக்கு அம்பலப்படுத்தினார். இதனால் அமெரிக்க அரசால் தேடப்பட்ட நிலையில் அவர் ரஷ்யாவிற்கு தப்பி சென்று விட்டார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அவர் ரஷ்யாவில் வசித்து வருகிறார்.

எட்வர்ட் ஸ்னோடெனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சில கலைஞர்கள் சேர்ந்து, போரில் மரணம் அடைந்தவர்களின் நினைவிடங்கள் அமைந்துள்ள நியூயார்க் பூங்காவில் ஸ்னோடெனுக்கு அனுமதி பெறாமல் சிலை வைத்துவிட்டார்கள். இந்த தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் துணியால் சிலையை மூடினார்கள். பின்னர் உயர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி அங்கிருந்து சிலை அகற்றப்பட்டது.
இது பற்றி அடையாளம் தெரியாத அந்த கலைஞர்கள் அனிமல் நியூயார்க் என்ற வலைபூவில், இப்போது அநீதிக்கு எதிராக போராடுபவர்களுக்கு வெங்கலத்தில் சிலை வைப்பதற்கு பதிலாக அவர்கள் குற்றவாளிகள் என்று கூறி துரத்தப்படுகிறார்கள் என்று தெரிவித்து உள்ளார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி