பேஸ்புக் மூலம் முதன் முறையாக விவாகரத்து பெற்ற பெண்!…

விளம்பரங்கள்

வாஷிங்டன்:-அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டனை சேர்ந்தவர் விக்டர் சேனா பிளட் சராகு. இவரது மனைவி லெனோரா பைடூ (26). இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே, இவர்கள் மன்ஹாட்டன் சுப்ரீம் கோர்ட்டில் விவாகரத்து கேட்டு மனு செய்தனர். அதை தொடர்ந்து இருவரும் பிரிந்து வெவ்வேறு இடங்களில் தங்கியிருந்தனர்.

எனவே, நேரில் சந்திக்காமல் டெலிபோனில் பேசி வந்தனர். இதற்கிடையே, விக்டர் சேனா தனது வீட்டை காலி செய்துவிட்டு ஸ்கோ சென்று விட்டார். மேலும், அவர் எங்கு வேலை பார்க்கிறார் என்றும் தெரியவில்லை.எனவே, அவருக்கு ‘பேஸ்புக்’ இணையதளம் மூலம் சம்மன் அனுப்பும்படி சுப்ரீம் கோர்ட்டில் மனைவி பைடூ மனு செய்தார். அதை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக் கொண்டது.

அதன் மூலமே இருவரும் விவாகரத்து தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொண்டனர். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி மாத்யூ கூப்பர் வழக்கு தொடர்ந்த லெனோரா பைடூவுக்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தார். இதன் மூலம் ‘பேஸ்புக்’ வழியாக விவாகரத்து பெற்ற முதல் அமெரிக்க பெண் என்ற பெருமையை லெனோரா பைடூ பெற்றுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: