39 நாளில் செவ்வாய் கிரகம் சென்றடையும் ராக்கெட்!…

விளம்பரங்கள்

வாஷிங்டன்:-செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள தற்போது ராக்கெட் மூலம் விண்கலன்கள் அனுப்பப்படுகின்றன. அந்த ராக்கெட் விண்வெளியில் பல மாதங்கள் பயணம் செய்து செவ்வாய் கிரகத்தை அடைகிறது. தற்போது 39 நாட்களில் செவ்வாய் கிரகத்தை சென்றடையும் வகையில் அமெரிக்காவின் நாசா நிறுவனம் புதிய ராக்கெட் ஒன்றை தயாரிக்கிறது. அதற்கான பொறுப்பு தி ஆட் அஸ்ட்ரா ராக்கெட் கம்பெனியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அது டெக்சாஸ் மாகாணத்தில் உள்ளது. அதிக சக்திவாய்ந்த இந்த ராக்கெட் என்ஜின் தயாரிக்க ‘நாசா’ நிறுவனம் இன்னும் 3 வருடங்களில் ரூ.6 கோடி வழங்குகிறது. இந்த புதிய ராக்கெட்டில் வழக்கத்துக்கு மாறாக ‘வாசிமின்’ ரக என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது ‘பிளாஸ்மா’ ராக்கெட் என அழைக்கப்படுகிறது. ராக்கெட்டில் உள்ள பிளாஸ்மா’ என்ற நிறமற்ற திரவத்தை பல மடங்கு எடுத்து ரேடியோ அலைகளை உருவாக்கி ‘வாசிமின்’ என்ஜின் இயக்கப்படும். பிளாஸ்மா திரவம் மற்ற ராக்கெட்டுகளை விட தொடர்ந்து 100 மணி நேரத்துக்கு மேல் எரிக்கப்படுவதால் அதிக சக்தி கிடைக்கிறது. அதன் மூலம் 39 நாளில் ராக்கெட் செவ்வாய் கிரகத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: