செய்திகள்,திரையுலகம் நடிகைகள் நஸ்ரியா, நித்யா மேனன் மீது மம்மூட்டி மகன் வருத்தம்!…

நடிகைகள் நஸ்ரியா, நித்யா மேனன் மீது மம்மூட்டி மகன் வருத்தம்!…

நடிகைகள் நஸ்ரியா, நித்யா மேனன் மீது மம்மூட்டி மகன் வருத்தம்!… post thumbnail image
சென்னை:-மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான பெங்களூர் டேஸ் மலையாள படமும் தமிழில் ரீமேக் ஆகிறது. மலையாளத்தில் வெளியான இப்படத்தில் மம்மூட்டி மகன் துல்கர் சல்மான், நிவின் பாலே, நஸ்ரியா, நித்யா மேனன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படத்தின் வெற்றி விழாவில் உடன் நடித்தவர்களை சந்திக்கலாம் என்று எண்ணி முதல் நபராக வந்த துல்கருக்கு ஏமாற்றம் காத்திருந்தது.

வந்திருந்த மற்றொரு நடிகர், நிவின் மட்டுமே. காத்திருந்து பார்த்து ஏமாந்த பட குழுவினர் வந்தவரை போதும் என்று 2 நடிகர்களுக்கும், டெக்னீஷியன்களுக்கும் ஷீல்டு கொடுத்து அனுப்பியது.வீட்டுக்கு சென்ற துல்கருக்கு தூக்கம் வரவில்லை. ஷூட்டிங்கில் குடும்பம்போல் பழகினோம். எல்லோரையும் பார்க்கலாம் என்று எண்ணி விழாவுக்கு சென்றால் யாருமே வரவில்லையே என சோகம் வாட்டியது. லேப்டாப்பை எடுத்தவர், நஸ்ரியா, பஹத் பாசில், நித்யா மேனன், பார்வதி, இஷா உங்கள் எல்லோரையும் பார்க்க வந்தேன். வராமல் ஏமாற்றவிட்டீர்களே என இணைய தளத்தில் ஒவ்வொருவரின் பார்வைக்கும் மெசேஜ் தட்டிவிட்டிருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி