செய்திகள்,திரையுலகம் நடிகர் அருண் விஜய் படத்தை டிரெண்ட் செய்த அஜீத் ரசிகர்கள்!…

நடிகர் அருண் விஜய் படத்தை டிரெண்ட் செய்த அஜீத் ரசிகர்கள்!…

நடிகர் அருண் விஜய் படத்தை டிரெண்ட் செய்த அஜீத் ரசிகர்கள்!… post thumbnail image
சென்னை:-‘என்னை அறிந்தால்’ படம் மூலமாக அஜீத் ரசிகர்களை வெகுவாக கவந்தார் நடிகர் அருண் விஜய். அவர் நடித்துள்ள ’வா டீல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இதையடுத்து, யாரும் எதிர்பாராதவிதமாக இது இந்திய அளவில் டிரெண்ட் ஆனது. இதற்கு முக்கிய காரணம், அஜீத் ரசிகர்கள். ’வா டீல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்ட ஒரு மணி நேரத்தில் #VaaDeal என்கிற ஹேஸ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது.

’சூப்பர் விக்டர், ராக்கிங் ஃபர்ஸ்ட் லுக், கட்டாயம் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ’ என அஜீத் ரசிகர்கள் தொடர்ந்து ட்வீட் செய்து படத்தை ட்விட்டரில் விளம்பரப்படுத்தினார்கள். உடனே குஷியான அருண் விஜய்யும் ரசிகர்களின் கமெண்ட்ஸை தொடர்ந்து ரீட்வீட் செய்தார். ஒரு நல்ல ஹிட் படத்துக்காக பல வருடங்களாக காத்திருந்த அருண் விஜய்க்கு ’தடயறத் தாக்க’ ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ’என்னை அறிந்தால்’ படமும் அருண் விஜய்க்கு நல்ல பெயரை அளித்தது. இப்போது, ஆக்‌ஷன் படமான ’வா டீல்’ நிச்சயம் பலத்த ஓபனிங்குடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி