செய்திகள்,திரையுலகம் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திய ‘புலி’ திரைப்படம்!…

எதிர்பார்ப்பை அதிகப்படுத்திய ‘புலி’ திரைப்படம்!…

எதிர்பார்ப்பை அதிகப்படுத்திய ‘புலி’ திரைப்படம்!… post thumbnail image
சென்னை:-சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரு வேடங்களில் நடித்துவரும் புலி படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் மற்றும் ஹன்சிகாவும் நடித்து வருகின்றனர். மேலும் இதில் விஜய் காமெடி வேடத்தில் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளிவந்தன. எப்படி வில்லன் ராஜேந்திரனுக்கு காமெடி ஓர்க் அவுட்டாகியதோ அதே போல விஜய்யிடம் உள்ள காமெடி பாடிலாங்வேஜ்ஜை வைத்து சிம்புதேவன் படத்தை இயக்கி வருகிறார். விஜய்யுடன் இமான் அண்ணாச்சி படம் முழுக்க வருகிறார். படப்பிடிப்பின் போது விஜய் அடிக்கும் லூட்டியை அப்படியே ஸ்கிரிப்டில் சேர்த்து படத்தை இயக்கி வருகிறாராம்.

இதில் இமான் அண்ணாச்சி தன்னுடைய சிறு வயதில் ஏற்பட்ட காமெடியான அனுபவங்களை கேட்டு அதற்கு ஏற்றார் போல காட்சி அமைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறதாம். இன்னும் ஒரு மாதம் படப்பிடிப்பு நடக்க வேண்டியிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ‘அட்டக்கத்தி’ புகழ் நந்திதா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மாபெரும் பொருட்செலவில் தயாராகி வரும் புலி திரைப்படம் வரும் ஜூன் மாதம் திரைக்கு வரவுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி