அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் அகமதாபாத்தில் நடக்குமா?…மோடி தீவிர முயற்சி…

2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் அகமதாபாத்தில் நடக்குமா?…மோடி தீவிர முயற்சி…

2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் அகமதாபாத்தில் நடக்குமா?…மோடி தீவிர முயற்சி… post thumbnail image
புதுடெல்லி:-அடுத்த ஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் 2016-ல் நடைபெற இருக்கிறது. அதேபோல் 2020-ம் ஆண்டு போட்டிகளை நடத்த ஜப்பானின் டோக்கியோ தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு பல நாடுகளும் முயற்சித்து வருகின்றன. இந்த மாத கடைசியில் சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் தாமஸ் பேச் இரண்டு நாள் பயணமாக இந்தியா வர இருக்கிறார். அந்த பயணத்தின்போது பிரதமர் மோடியையும் சந்திக்க இருக்கிறார். அப்போது மோடி தன் விருப்பத்தை தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான முறையான விண்ணப்பத்தை சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பிடம் சமர்பிக்க வேண்டும்.
இதில் எந்த நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந்தேதி பெருவில் நடைபெறும் கூட்டத்தில் சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பு அறிவிக்கும். ஒலிம்பிக் போட்டிகளை அகமதாபாத் நகரில் நடத்த முயற்சிப்பதின் மூலம் மீண்டும் ஒருமுறை தன்னுடைய சொந்த மாநில பாசத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் இந்திய பிரதமர் மோடி.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி