அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் பாக். முன்னாள் அதிபர் முஷரப்புக்கு பிடிவாரண்ட்!…

பாக். முன்னாள் அதிபர் முஷரப்புக்கு பிடிவாரண்ட்!…

பாக். முன்னாள் அதிபர் முஷரப்புக்கு பிடிவாரண்ட்!… post thumbnail image
இஸ்லாமாபாத்:-2007-ம் ஆண்டு லால் மசூதிக்குள் ராணுவம் புகுந்து நடத்திய தாக்குதலில் 10 ராணுவ வீரர்கள் உள்பட 100 கொல்லப்பட்டனர். சிவப்பு மசூதி என்கிற வேறு பெயரும் உடைய லால் மசூதி மீது பாதுகாப்பு படையினர் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியதில் அந்த மசூதியின் துணை நிர்வாகி அப்துல் ரஷீத் காஸி என்பவர் உள்ளிட்ட ஏராளமானோர் உயிரிழந்தனர்.

இந்த ராணுவ நடவடிக்கையில் முஷரப்புக்கு தொடர்பு இருந்ததாக கூறி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜராவதில் இருந்து முஷரப்புக்கு முழு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என அவரது வக்கீல் மனு தாக்கல் செய்தார். அப்போது முஷரப் தொடர்ச்சியாக வழக்கு விசாரணையில் ஆஜராகவில்லை. ஆகவே, அவருக்கு முழு விதிவிலக்கு அளிக்க முடியாது என்று கூறி ஜாமினில் வரமுடியாத பிடிவாரண்டை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன் இந்த வழக்கை வரும் 27-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி