நறுக்கினால் கண்ணீர் வராத வெங்காயம் – ஜப்பானில் உற்பத்தியானது!…

விளம்பரங்கள்

டோக்கியோ:-வெங்காயத்தை உரிக்கும் வேளையிலும், நறுக்கும் வேளையிலும் கண்ணீர் வருவதை கண்டு, இவ்வளவு கஷ்டப்பட்டு உள்ளே ஒன்றுமே இல்லாத ஒரு வெங்காயத்தை நாம் ஏன் உரிக்க வேண்டும்? என்று அவர்கள் நினைத்திருப்பார்களோ.., என்னவோ..?… இந்த கஷ்டம் அடுத்த தலைமுறையினருக்கும் தொடர வேண்டாம் என்று நினைத்த ஜப்பானிய வேளாண்மை அறிவியல் துறையினர், உரித்தாலும், நறுக்கினாலும் அருகில் இருப்பவர்களின் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைக்காத நவீன ரக வெங்காயத்தை கண்டுபிடிப்பதில் தற்போது வெற்றியடைந்துள்ளனர்.

வெங்காயத்தில் கத்தி படும் வேளையில் அது வெளியேற்றும் வேதிக்கலவை தான் இந்த கண்ணீருக்கான காரணம் என்பதை கண்டறிந்த ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள், அந்த வேதிக்கலவை நீக்கப்பட்ட வெங்காய வித்துக்களை சமீபத்தில் உருவாக்கினர். அவற்றை நட்டு-வளர்த்து இந்த நவீன வகை வெங்காயங்களை விளைவித்து தற்போது சாதனை படைத்துள்ளனர். இதற்கான காப்புரிமையை பெற்றுள்ள ஒரு ஜப்பானிய நிறுவனம், இந்த வெங்காயம் வர்த்தக ரீதியாக விற்பனைக்கு வருமா?… என்பது தொடர்பாக கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: