கொல்கத்தாவில் ஐபிஎல் தொடக்க விழா!…

விளம்பரங்கள்

புதுடெல்லி:-8-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா வருகிற 8-ந்தேதி முதல் மே 24-ந்தேதி வரை நடக்கிறது. இந்தியாவின் 12 நகரங்களில் நடைபெறும் இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்பட எட்டு அணிகள் கலந்து கொள்கின்றன.

இதையொட்டி ஒரு நாளுக்கு முன்பாக அதாவது வருகிற 7-ந்தேதி கோலாகலமான தொடக்க விழா கொல்கத்தா சால்ட் லேக் ஸ்டேடியத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள் நடனமாடி கலக்க இருக்கிறார்கள். தொடக்க விழாவில் அசத்தப்போகும் பிரபலங்களின் பெயர் விவரம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. தொடக்க விழாவிற்கான ஆன்-லைன் டிக்கெட் விற்பனை நேற்று மாலை தொடங்கியது. குறைந்த பட்ச டிக்கெட் ரூ.200 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: