செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் கொம்பன் படம் ரிலீஸ் இன்று திடீர் நிறுத்தம்!…

கொம்பன் படம் ரிலீஸ் இன்று திடீர் நிறுத்தம்!…

கொம்பன் படம் ரிலீஸ் இன்று திடீர் நிறுத்தம்!… post thumbnail image
சென்னை:-நடிகர் கார்த்தி நடித்துள்ள கொம்பன் படத்துக்கு எதிராக புதிய தமிழகம் கட்சியினர் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.தாழ்த்தப்பட்ட மக்களை இழிவு படுத்துவது போன்ற காட்சிகள் படத்தில் இடம் பெற்றுள்ளது என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கொம்பன் தலைப்பை நீக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி வருகிறார்கள். மதுரை ஐகோர்ட்டில் கொம்பன் படத்தை தடை செய்ய கோரி வழக்கும் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஓய்வு பெற்ற நீதிபதிகள் படத்தை பார்த்து அறிக்கை தர உத்தரவிட்டனர். நேற்று சென்னையில் கொம்பன் படத்தை நீதிபதிகள் பார்த்தனர்.

அப்போது புதிய தமிழகம் கட்சியினர் சில வசனங்களுக்கு ஆட்சேபம் தெரிவித்தனர். வசனம் சரியாக புரியவில்லை என்றும் மீண்டும் படத்தை முதலில் இருந்து காட்ட வேண்டும் என்றும் படம் துவங்கிய சில நிமிடங்களிலேயே சர்ச்சை கிளப்பினார்கள். இதனால் நீதிபதிகளால் படம் பார்கக் முடியவில்லை. படத்தை முழுமையாக பார்க்காமல் மூன்று நிமிடங்களிலேயே அங்கிருந்து அவர்கள் வெளியேறி விட்டனர். இந்நிலையில் கொம்பன் படம் ஒரு நாள் முன்பாக இன்று (1–ந்தேதி) திரைக்கு வரும் என்று படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அறிவித்தார். இதையடுத்து இன்று காலை தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் ரசிகர்கள் குவிந்தனர். காலை காட்சி, பகல் காட்சிகள் பார்க்க டிக்கெட்டுக்கு முண்டியத்தார்கள். ஆனால் படம் இன்று வெளியாகவில்லை. திடீரென நிறுத்தப்பட்டது.

மதுரை ஐகோர்ட்டில் கொம்பன் பட வழக்கு இன்று பிற்பகல் 2 மணிக்கு மேல் விசாரணைக்கு வருகிறது. அப்போது தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீர்ப்பு விவரம் தெரிந்த பிறகு இன்று மாலை படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளதாக தயாரிப்பு வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. மதுரையில் நீதிபதிகள் படம் பார்க்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் நடிகர் சங்க தலைவர் சரத்குமார், தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி தாணு, டைரக்டர் சங்க தலைவர் விக்ரமன் ஆகியோர் கொம்பன் படத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். படத்தில் சர்ச்சை காட்சிகள் எதுவும் இல்லை என்றும் அறிவித்து உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி