செய்திகள்,திரையுலகம் ‘கொம்பன்’ திரைப்படம் இன்று ரிலீஸ்!…

‘கொம்பன்’ திரைப்படம் இன்று ரிலீஸ்!…

‘கொம்பன்’ திரைப்படம் இன்று ரிலீஸ்!… post thumbnail image
சென்னை:-நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள கொம்பன் படத்தை ஏப்ரல் 2-ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் ஏற்பாடுகளை செய்தனர். ஆனால், இப்படத்தின் தலைப்பு குறிப்பிட்ட சாதியை குறிப்பிடுவதாக குற்றம் சாட்டிய புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, இப்படம் வெளியானால் சாதிக்கலவரம் ஏற்படும் என்றும் தெரிவித்தார். அத்துடன் இப்படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி ஐகோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தார்.

தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி தாணு, இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன், நடிகர் சங்க தலைவர் சரத்குமார் ஆகியோர் கொம்பன் படத்தைப் பார்த்தனர். பின்னர், பத்திரிகையாளர்களை சந்தித்த அவர்கள், படத்தில் வன்முறைக் காட்சிகளோ, தனிப்பட்ட யாரையும் புண்படுத்தும் காட்சிகளோ இல்லை என்றும், குடும்பப் பின்னணியில் இப்படம் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினர்.

மேலும், படத்தை ஏப்ரல் 2ம் தேதி திரையிட்டால் பிரச்சினை ஏற்படும் என்று தகவல்கள் வந்திருப்பதால், ஏப்ரல் 1-ம் தேதியே வெளியிட உள்ளதாகவும் அறிவித்தனர். படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கியபிறகு அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறியது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி