செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் ‘கொம்பன்’ திரைப்படத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி!…

‘கொம்பன்’ திரைப்படத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி!…

‘கொம்பன்’ திரைப்படத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி!… post thumbnail image
சென்னை:-நடிகர் நடித்துள்ள திரைப்படம் ‘கொம்பன்’. இப்படத்தில் இந்த வழக்கில் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவு படுத்துவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகவும் கொம்பன் தலைப்பை நீக்க வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட்டில் எதிராக புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி வழக்கு தொடர்ந்தார். மேலும் கொம்பன் படத்தை தடை செய்யவும் வற்புறுத்தினர்.

இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போதே, இப்படத்தை வெளியிட படக்குழுவினர் மும்முரம் காண்பித்தனர். இதனால் 2ம் தேதி வெளியாக வேண்டிய கொம்பன் படம், ஒரு நாள் முன்னதாகவே இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் மதுரை ஐகோர்ட்டில் கொம்பன் பட வழக்கு இன்று பிற்பகல் 2 மணிக்கு மேல் விசாரணைக்கு வருவதால் தீர்ப்புக்கு பிறகு படத்தை வெளியிட முடிவு செய்தனர். அதன்படி இந்த வழக்கு மதுரை ஐகோர்ட்டில் இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், கொம்பன் படத்தை வெளியிட தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்துவிட்டனர். படம் வெளியான பிறகு சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றால் வழக்கு தொடரலாம் என்றும் தீர்ப்பளித்துள்ளனர். இதையடுத்து கொம்பன் படம் திட்டமிட்டபடி இன்று மாலை வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி