செய்திகள்,திரையுலகம் நடிகர் அஜித் பிறந்த நாளன்று வெளியாகும் ‘புறம்போக்கு’ படம்!…

நடிகர் அஜித் பிறந்த நாளன்று வெளியாகும் ‘புறம்போக்கு’ படம்!…

நடிகர் அஜித் பிறந்த நாளன்று வெளியாகும் ‘புறம்போக்கு’ படம்!… post thumbnail image
சென்னை:-ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நடிப்பில் ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘புறம்போக்கு’. இந்தப் படத்தை யுடிவி நிறுவனத்துடன், எஸ்.பி.ஜனநாதனின் பைனரி பிக்சர்ஸும் சேர்ந்து தயாரித்துள்ளது. இப்படத்துக்கு வர்ஷன் இசையமைத்துள்ளார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் படத்தின் அனைத்து கட்டப் பணிகளும் முடிந்துவிட்ட நிலையில் படம் ரிலீஸுக்கு தயாராகிவிட்டது.

இதனிடையே படத்தின் இசை ஏப்ரல் முதல் வாரத்திலும் படம் மே1-ம் தேதியும் வெளியாகவிருக்கின்றன. இதை யுடிவி தனஞ்ஜெயன் தன் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். ஜனநாதன் படத்தின் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டார். ரிலீஸ் செய்யத் தயாராகிவிட்டோம். மே 1-ல் ‘புறம்போக்கு’ படத்தை ரிலீஸ் செய்கிறோம் என்று தனஞ்ஜெயன் அறிவித்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா நடித்துள்ள மாஸ் படமும் இதே நாளில் தான் ரிலீஸாகவிருக்கிறது. மே 1ம் தேதி அஜித் பிறந்த நாள் என்பதால் ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி