செய்திகள் தாய், தந்தை பாடிய பாடலை கேட்டு கர்ப்பப்பையில் கை தட்டிய 14 வார குழந்தை!…

தாய், தந்தை பாடிய பாடலை கேட்டு கர்ப்பப்பையில் கை தட்டிய 14 வார குழந்தை!…

தாய், தந்தை பாடிய பாடலை கேட்டு கர்ப்பப்பையில் கை தட்டிய 14 வார குழந்தை!… post thumbnail image
லண்டன்:-பிரிட்டனில் வசிக்கும் ஜென் கார்டியனல், தனது கணவருடன் சேர்ந்து, தான் வயிற்றில் சுமந்து வரும் 14 வார குழந்தையை தாலாட்டி மழலையர் பாடல் ஒன்றை பாட, அந்த பாட்டிற்கு ஏற்றவாறு குழந்தை கர்ப்பப்பைக்குள் அழகாக கை தட்டும் காட்சிகள், அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் காட்சிகள் மூலம் மருத்துவர்களால் படம்பிடிக்கப்பட்டன. இந்த காட்சிகளை ஜென் கார்டியனல்லின் கணவர் வீடியோவாக பதிவு செய்தார்.

குழந்தை கை தட்டும் காட்சிகளை ரீவைன்ட் செய்து பார்த்த தாயும், தந்தையும் மகிழ்ச்சியில் திளைத்தனர். இது குறித்து தாய் ஜென் கூறுகையில், இந்த அனுபவத்தை என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. எனது குழந்தை மூன்று முறை கை தட்டியது. இது போன்ற செயல் மர்மமானது அல்ல. இது ஆச்சரியமான நிகழ்வு என கூறினார். மழலையர் பாடலுக்கு தனது குழந்தை கை தட்டும் 15 வினாடி காட்சிகளை யூ டியூபில் ஜென் வெளியிட, ஒரே நாளில் மட்டும் அந்த வீடியோவை 48000 பேர் பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி