நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் வெட்டோரி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!…

விளம்பரங்கள்

ஆக்லாந்து:-நியூசிலாந்து அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் வெட்டோரி. நீண்ட நாட்களாக அணியில் சேர்க்கப்படாத அவர் உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றிருந்தார். சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி இந்த உலகக்கோப்பையில் 9 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகள் வீழ்த்தி அணி வெற்றிக்கு துணையாக இருந்தார்.

நியூசிலாந்து அணி மெல்போர்னில் விளையாடிய இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. அதனைத்தொடர்ந்து அந்த அணி வீரர்கள் இன்று நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து வந்தடைந்தனர். அப்போது நிருபர்களை சந்தித்த வெட்டோரி, தான் அனைத்து வகை கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதுகுறித்து அவர் கூறும்போது

உலகக்கோப்பை போட்டிதான் நியூசிலாந்து அணிக்காக நான் விளையாடிய கடைசி போட்டி. என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் அது சிறப்பானதாக முடிந்தது. அந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் அது இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்றார். 18 வயதில் 1997-ம் ஆண்டு நியூசிலாந்து அணியில் இளம்வீரராக தனது கிரிக்கெட் வாழ்க்கையை துவங்கிய வெட்டோரி 4000 ரன்களும் அடித்து 300 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: