நடிகர் விஜய்யுடன் முதல் முறையாக இணையும் நடிகை ராதிகா!…

விளம்பரங்கள்

சென்னை:-தற்போது புலி படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்ததாக ‘ராஜா ராணி’ படத்தை இயக்கிய அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை ‘கலைப்புலி’ எஸ்.தாணு தயாரிக்கிறார். இவர் விஜய்யுடன் இணையும் மூன்றாவது படம் இது. ஏற்கனவே விஜய் நடித்த சச்சின், துப்பாக்கி படங்களை இவர் தான் தயாரித்திருந்தார்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார் என்பதும், இப்படத்திற்கு அட்லியின் ‘ராஜா ராணி’ படத்திற்கு இசை அமைத்த ஜி.வி.பிரகாஷ்குமாரே இசை அமைக்கிறார் என்பதும் ஏற்கெனவே முடிவான விஷயம். லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் இந்தப் படத்தில் பிரபல நடிகை ராதிகாவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இந்த தகவலை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பெரும்பாலான முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ள ராதிகா சரத்குமார் இதுவரை விஜய் கூட நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: