தமிழ் படங்களில் நடிப்பேன் – நடிகை வித்யாபாலன்!…

விளம்பரங்கள்

மும்பை:-பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை வித்யா பாலன். மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘தி டர்டி பிக்சர்’ என்ற படத்தில் சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்து பரபரப்பாக பேசப்பட்டார். இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.

இரு வருடங்களுக்கு முன்பு சித்தார்த் ராய்கபூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழ் படங்களில் நடிக்கவும் வாய்ப்பு தேடுகிறார்.
இதுகுறித்து வித்யாபாலன் கூறும்போது:- சென்னை என்றதும் எனக்கு குழந்தை பருவம்தான் நினைவுக்கு வரும். சிறுவயதில் கமலின் தீவிர ரசிகையாக இருந்தேன். சிறுவயதில் அவரது வீட்டுக்கு சென்று இருக்கிறேன். ஆனால் கமல் வெளியூரில் இருந்ததால் சந்திக்க முடியவில்லை. தமிழில் நல்ல கதைகள் அமைந்தால் நடிக்க தயாராக இருக்கிறேன் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: