டூப்ளிகேட் கமலுடன் போட்டோ எடுத்த நடிகை காவ்யா மாதவன்!…

விளம்பரங்கள்

சென்னை:-நடிகை காவ்யா மாதவன் தற்போது ஆகாசவாணி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பில் காவ்யா மாதவன் ஆச்சரியப்படும்படியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது இப்படத்திற்காக கிரேன் ஆப்ரேட்டராக பணியாற்றும் ஹைதராபாத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் தான் காவ்யாவை ஆச்சரியப்படுத்தியுள்ளாராம்.

ஏனென்றால் ஸ்ரீதரின் உயரம் 7 அடி 4 அங்குலம், அதோடு இவர் தான் நடிகர் கமலின் தசாவதாரம் படத்தில் உயரமான முஸ்லீம் இளைஞனுக்கு டூப்பாக நடித்தவராம். காவ்யா மாதவன் எது கேட்டாலும் அவரிடம் தலை குனிந்து மரியாதையாக பேசுவாராம் ஸ்ரீதர். ஆகாசவாணி படத்தின் மூலம் ஆகாச உயரத்தில் எனக்கு கிடைத்த நல்ல நண்பன் என்று காவ்யா ஸ்ரீதருடன் எடுத்த போட்டோவை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: