செய்திகள்,திரையுலகம் மனதில் ஒரு மாற்றம் (2015) திரை விமர்சனம்…

மனதில் ஒரு மாற்றம் (2015) திரை விமர்சனம்…

மனதில் ஒரு மாற்றம் (2015) திரை விமர்சனம்… post thumbnail image
நாயகன் மதன் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். அப்பா, அம்மா, தங்கை என குடும்பத்துடன் சந்தோஷமாக இருந்து வருகிறார். இவருடைய அப்பாவிற்கு காதல் என்றாலே பிடிக்காது. மதன் நண்பர்களுடன் சேர்ந்துக் கொண்டு கம்யூட்டர் கோர்ஸ் படித்து வருகிறார். அதே கம்யூட்டர் சென்டரில் படிக்கும் நாயகி ஸ்பூர்த்தி நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். அம்மா, அப்பா மூன்று தங்கைகள் என வாழ்ந்து வருகிறார். ஸ்பூர்த்தி காதல் கல்யாணம் என்பதை வெறுக்கிறார். பெற்றோர்களை ஏமாற்றும் காதல் திருமணத்திற்கும் எதிரியாக இருக்கிறார். ஒரு சந்திப்பில் ஸ்பூர்த்தியை பார்க்கும் மதன் பார்த்தவுடனே அவள்மீது காதல் வயப்படுகிறார். காதல் என்றாலே வெறுத்து வரும் ஸ்பூர்த்தியை காதலிக்க வைக்க முயற்சி செய்கிறார் மதன். ஆனால் ஸ்பூர்த்தியோ மதன் மீது ஈடுபாடு இல்லாமல் இருந்து வருகிறார்.

ஒரு கட்டத்தில் இருவரும் நண்பர்களாகின்றனர். இது நாளடைவில் இவர்களுக்குள் காதலாக மாறிவிடுகிறது. இருந்தாலும், இருவரும் காதலை வெளிப்படுத்தாமல் இருந்து வருகிறார்கள்.
இதற்கிடையில் ஸ்பூர்த்தியின் அப்பா, செய்தித்தாளில் காதல் திருமணத்தால் ஒரு குடும்பம் தற்கொலை செய்துக் கொண்டுள்ள செய்தியை படிக்கிறார். இதை படித்தவுடன் என் நான்கு பெண்களும் இதுபோல் காதல் திருமணம் செய்தால் நானும் குடும்பத்துடன் தற்கொலை செய்வேன் என்று சொல்கிறார். இதை கேட்கும் ஸ்பூர்த்தி தன் குடும்பத்திலும் இதுபோல் நடந்து விடுமோ என்று பயப்படுகிறார். மறுநாள் ஸ்பூர்த்தியிடம் மதன் காதலை சொல்ல வரும் போது காதலை ஏற்றுக் கொள்ளாமல் அவனை வெறுக்கிறாள். மதனிடம் பேசுவதையும் பழகுவதையும் நிறுத்த ஆரம்பிக்கிறாள். இதனால் மனவேதனையடையும் மதன் குடித்துவிட்டு விபத்தில் மாட்டிக்கொள்கிறார். மதனின் நண்பர்கள் அவனை மனமாற்றம் செய்ய முயற்சி செய்கிறார்கள். ஆனால் மதனோ ஸ்பூர்த்தியை மறக்க முடியாமல் இருக்கிறார். இறுதியில் மதன் ஸ்பூர்த்தியின் மனதை மாற்றி திருமணம் செய்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் மதன், புதுமுகம் என்பதால் நடிக்க மிகவும் சிரமப்பட்டிருக்கிறார். காதல், சென்டிமென்ட் என சிறப்பாக நடிக்க முயற்சி செய்திருக்கிறார்.நாயகி ஸ்பூர்த்தி புதுமுகம் என்று தெரியாதளவிற்கு சிறப்பாக நடித்திருக்கிறார். அழகாக வந்து அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகளிலும், காதலனா? பெற்றோர்களா? என இக்கட்டான முடிவு எடுக்கும் இடங்களில் இரண்டு விதமான நடிப்புகளை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார். நண்பர்களாக நடித்திருக்கும் அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.காதலை பலவிதமாக கண்ட நமக்கு, வித்தியாசமான காதலை சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர். நல்ல கதையை எடுத்துக் கொண்ட இயக்குனர் அதில் திறமையான நடிகர்களை வைத்து இயக்கியிருந்தால் படத்திற்கு பலமாக அமைந்திருக்கும். இன்றைய காலகட்டத்தில் உள்ள காதலிக்கும் இளைஞர்கள் பெற்றோர்களையும் நினைத்து பார்க்க வேண்டும் என்ற கருத்தை அழுத்தமாக சொல்லியிருக்கிறார். திரைக்கதையில் கொஞ்சம் சுவாரஸ்யத்தையும் தேவையற்ற காட்சிகளையும் இயக்குனர் கவனித்திருக்கலாம். ஸ்ரீசாஸ்தா இசையில் பாடல்கள் சுமார் ரகம். ஒரு மெலோடியான பாடல் மட்டும் கேட்கும் ரகமாக அமைந்திருக்கிறது. அதையே பின்னணி இசையிலும் சேர்த்திருப்பது சிறப்பு. சாய் நந்தா ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் ‘மனதில் ஒரு மாற்றம்‘ காதல்………..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி