செய்திகள்,திரையுலகம் ‘என்னை அறிந்தால்’ படத்தின் கோலகல கொண்டாட்டம்!…

‘என்னை அறிந்தால்’ படத்தின் கோலகல கொண்டாட்டம்!…

‘என்னை அறிந்தால்’ படத்தின் கோலகல கொண்டாட்டம்!… post thumbnail image
சென்னை:-நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் டீசன்டான வசூலை தந்தது. இப்படம் கடந்த வாரம் 50 நாளை எட்டியது. இதை கொண்டாடும் விதத்தில் மதுரை ரசிகர்கள் நேற்று ஒரு திரையரங்கில் விழா எடுத்தனர்.

இதற்காக கடந்த ஒரு வாரமாகவே அந்த திரையரங்குகளில் பேனர், போஸ்டர் வைக்கப்பட்டு வந்தது. நேற்று மாலை 5 மணியளவில் கொண்டாட்டம் தொடங்கியது, ரசிகர்கள் படத்தின் முதல் நாள் காட்சி போன்று கொண்டாடி இனிப்பு வழங்கினர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி