பப்புவா நியூகினியாவில் கடும் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!…

விளம்பரங்கள்

போர்ட்மோர்ஸ்பை:-பப்பு நியூகினியா தீவில் இன்று காலையில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.7 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத மதிப்பு குறித்த விபரம் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் பப்பு நியூகினியா தீவுக்கூட்டத்தை சேர்ந்த நியூ பிரிட்டனர் தீவு அருகே சுமார் 54 கி.மீ தொலைவில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமிருப்பதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: