செக்ஸ் நடிகை என்று என்னை ஒதுக்குகிறார்கள் – சன்னி லியோன்!…

விளம்பரங்கள்

மும்பை:-நடிகை சன்னி லியோன் இந்தி படங்களில் நடித்து வருகிறார். இவர் வெளி நாடுகளில் செக்ஸ் படங்களில் நடித்தவர். இவரது ஆபாச படங்களுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு உள்ளது. 2012–ம் ‘ஜிஸ்ம் 2’ என்ற இந்தி படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருகிறார். சன்னி லியோன் அளித்த பேட்டி வருமாறு:– இந்தி படங்களில் பிசியாக நடிக்கிறேன். ஆனாலும் பட உலகினரும் ரசிகர்களும் என்னை இழிவாக தரம் தாழ்த்தியே பார்க்கின்றனர்.

முழுமையான நடிகையாக என்னை ஏற்கவில்லை. செக்ஸ் நடிகை என்று ஒதுக்குகிறார்கள்.இந்தி கதாநாயகர்களின் மனைவி மார்கள் என்னுடன் நடிக்க கூடாது என்று கணவன் மார்களுக்கு தடைவிதிக்கிறார்கள். கணவன்மார்களை என் வலையில் விழவைத்து அபகரித்து விடுவேன் என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கிறது.

நான் சொல்லிக் கொள்வதெல்லாம் உங்கள் கணவன் மார்கள் எனக்கு தேவை இல்லை. எனக்கு கணவன் இருக்கிறார் என்பது தான். சில தயாரிப்பு நிறுவனங்கள் கூட எனக்கு வாய்ப்பு தர பயப்படுகின்றன. இவ்வாறு சன்னி லியோன் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: