செய்திகள் 530 ஆண்டுகளுக்கு பின் இங்கிலாந்து மன்னரின் உடல் அடக்கம்!…

530 ஆண்டுகளுக்கு பின் இங்கிலாந்து மன்னரின் உடல் அடக்கம்!…

530 ஆண்டுகளுக்கு பின் இங்கிலாந்து மன்னரின் உடல் அடக்கம்!… post thumbnail image
லண்டன்:-இங்கிலாந்து நாட்டில் மன்னர் ஆட்சி காலத்தின் போது மூன்றாம் ரிச்சர்டு என்ற மன்னர் ஆட்சி செய்து வந்தார். 1485- ஆம் ஆண்டு நடந்த போரின் போது பாஸ்வெர்த் என்ற போர்க் களத்தில் அவர் கொல்லப்பட்டார். போரில் தோல்வி அடைந்த காரணத்தால் அவரது உடல் முறையாக அடக்கம் செய்யப்படவில்லை . சில நாட்களில் அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டு ஆற்றில் வீசப்பட்டது. அவரது சவப்பெட்டி குதிரை லாயத்தில் பயன் படுத்தப்பட்டது.

கடந்த 2012-ஆம் ஆண்டு மாநகராட்சி பகுதியில் கார்கள் நிறுத்தும் இடம் ஒன்றின் கீழே மன்னரின் உடல் பகுதிகள் கண்டெடுக்கப்பட்டன. அவரது வம்சத்தில் வந்த ஒருவரின் மரபணுவுடன் ஒப்பிட்டு அது மன்னரின் உடல் தான் என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் இறந்து 530 ஆண்டுகள் கழித்து மன்னர் மூன்றாம் ரிச்சர்டு உடல் நேற்று அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக கடந்த ஞாயிற்றுக் கிழமை மன்னரின் உடல் ஓக் மரத்தில் தயாரிக்கப்பட்ட சவபெட்டியில் வைத்து குதிரை வண்டி மூலம் லண்டனில் உள்ள தேவாலயத்துக்கு கொண்டுவரப்பட்டது. இங்கு பொது மக்கள் 35 ஆயிரம் பேர் கூடி நின்று மன்னரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி