செய்திகள்,விளையாட்டு இந்தியா தோல்விக்கு சச்சின் சொல்லும் காரணங்கள்!…

இந்தியா தோல்விக்கு சச்சின் சொல்லும் காரணங்கள்!…

இந்தியா தோல்விக்கு சச்சின் சொல்லும் காரணங்கள்!… post thumbnail image
சிட்னி:-11–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகின்றன. சிட்னியில் நேற்று நடைபெற்ற 2–வது அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், உலகின் ‘நம்பர் ஒன்’ அணியான ஆஸ்திரேலியாவும் மோதின. இதில் இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தியாவின் தோல்விக்கான காரணங்கள் குறித்து சச்சின் தனது டுவிட்டரில் தகவலை பதிவு செய்துள்ளார்.

இந்தியா இந்த தொடர் முழுவதும் சிறப்பாக ஆடியது. இருப்பினும் தோல்வியை சகித்துக் கொள்வது கஷ்டமானதுதான். இந்த நேரத்தில் ஆஸ்திரேலியாவுக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்டீவ் ஸ்மித்தின் சதம், பின்ஞ் கொடுத்த பார்ட்டனர்ஷிப் மற்றும் ஜான்சனின் பினிஷிங் பந்துவீச்சு ஆகியவை இணைந்து இந்தியாவிடமிருந்து வெற்றியை பறித்துவிட்டன என்று சச்சின் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி