செய்திகள் ஆப்பிள் இயக்குனர் டிம் குக் அனைத்து சொத்துகளையும் தானம் செய்ய முடிவு!…

ஆப்பிள் இயக்குனர் டிம் குக் அனைத்து சொத்துகளையும் தானம் செய்ய முடிவு!…

ஆப்பிள் இயக்குனர் டிம் குக் அனைத்து சொத்துகளையும் தானம் செய்ய முடிவு!… post thumbnail image
கலிபோர்னியா:-தகவல் தொழில்நுட்ப துறையில் இருக்கும் முக்கிய ஜாம்பவான்கள் பலர் ஏற்கனவே தங்களிடம் இருக்கும் அபரிமிதமான சொத்துகளை பொது சேவைக்கு கொடுத்து வருகிறார்கள். முக்கியமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உரிமையாளர் பில் கேட்ஸ், பேஸ்புக் நிறுவனர் மார்க், ஆரக்கிள் கார் நிறுவனத்தின் லாரி எல்லிசன், பங்கு சந்தை கில்லாடி வாரன் பப்பட் போன்றவர்கள் ஏற்கனவே மருத்துவம், சுற்றுசூழல் பிரச்சனைகளுக்காக பெரிய அளவில் தங்கள் செல்வத்தை கொடுத்து வருகிறார்கள்.

ஆப்பிள் நிறுவனத்தின் இயக்குனராக இருக்கும் டிம் குக்கிற்கு மொத்தமாக 785 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. தற்போது டிம் குக் 10-வயதான உறவுக்கார சிறுவனின் கல்வி செலவுகளை கவனித்து வருகிறார். அந்த பையனின் கல்லூரி படிப்புக்கு பின், அனைத்து சொத்துகளையும் பொது நலனுக்கு கொடுக்க இருப்பதாக இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் குக் தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு தான் டிம் குக் தன்னை ஓரின சேர்க்கையாளர் என அறிவித்ததுடன், மாற்று பாலினத்தவர்கள் மீது நடத்தப்படும் குற்றங்களுக்கு எதிராகவும் தொடர்ந்து பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி