அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் அமெரிக்காவுடன் பேச்சு நடத்த தயார்: சிரியா அதிபர் அறிவிப்பு!…

அமெரிக்காவுடன் பேச்சு நடத்த தயார்: சிரியா அதிபர் அறிவிப்பு!…

அமெரிக்காவுடன் பேச்சு நடத்த தயார்: சிரியா அதிபர் அறிவிப்பு!… post thumbnail image
வாஷிங்டன்:-கடந்த 5 ஆண்டுகளாக சிரியாவில் நடைப்பெற்று வரும் உள்நாட்டு போரினால் பல லட்சம் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவின் தனியார் தொலைக்கட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த ஆசாத், அமெரிக்கவுடன் பேச்சு நடத்த தயாராகவுள்ளேன். தற்போது உள்ள சூழ்நிலையில் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது சிரியாவுக்கு நல்ல விளைவுகளையே ஏற்படுத்தும். ஆனால் எங்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கவிற்கும் எங்களுக்கும் நேரடியான தகவல் தொடர்பு இல்லை என்றும் அவர் தெரிவித்தார். முன்னதாக கடந்த மார்ச் 15-ல் அமெரிக்காவின் வெளிவிவகார துறை மந்திரி ஜான் கெர்ரியும் இதே கருத்தை தெரிவித்து இருந்தார். ஆனால் சிரியாவில் நடைபெரும் போருக்கு முக்கிய காரணமே ஆசாத் தான். எனவே அவருடன் பேச்சு நடத்தக்கூடாது என கிளர்ச்சி படை எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இது பற்றி கருத்து தெரிவித்துள்ள அமெரிக்காவின் உயர் அதிகாரி ஒருவர் ஆசாத்தின் பிரதிநிதிகளுடன் நாங்கள் பேச்சு நடத்த தயாராக உள்ளோம். அவருடன் நேரடியாக பேச்சு நடத்து திட்டம் இல்லை என தெரிவித்துள்ளார். சிரியாவில் நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்தப்படவேண்டும் என அமெரிக்கா நீண்ட நாட்களாகவே கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி