நடிகர் அஜித்தை தொடர்ந்து விக்ரம் – உற்சாகத்தில் அனிருத்!…

விளம்பரங்கள்

சென்னை:-‘கத்தி’யின் மூலம் விஜய்யுடன் இணைந்த அனிருத், தற்போது ‘வீரம்’ சிவா இயக்கவிருக்கும் புதிய படத்தின் மூலம் ‘தல’ அஜித்துடனும் கூட்டணி அமைத்திருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்கவிருக்கிறது.

இப்படத்திற்காக ஸ்பெஷல் தீம் ஒன்றை அனிருத் உருவாக்கவிருக்கிறாராம். விஜய், அஜித்தைத் தொடர்ந்து இப்போது விக்ரமுடனும் முதன்முறையாக இணைகிறார் அனிருத். ஏற்கெனவே ஷங்கரின் ‘ஐ’ படத்தில் ‘மெர்சலாயிட்டேன்…’ பாடலை அனிருத் பாடியிருந்தார். ‘10 எண்றதுக்குள்ள’ படத்தைத் தொடர்ந்து ‘அரிமா நம்பி’ இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கும் படத்தில் நடிக்கிறார் விக்ரம். இப்படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கவிருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: