செய்திகள்,திரையுலகம் ‘காக்கி சட்டை’ திரைப்படத்தின் உண்மையான வசூல்!…

‘காக்கி சட்டை’ திரைப்படத்தின் உண்மையான வசூல்!…

‘காக்கி சட்டை’ திரைப்படத்தின் உண்மையான வசூல்!… post thumbnail image
சென்னை:-நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான்கராத்தே ஆகிய படங்கள்தான் அதிகமாக வசூலித்தவை. ஆனபோதும், அதற்கு முன்பு வெளியான எதிர்நீச்சல் படம் ரஜினி படங்களுக்கு இணையாக வசூலித்ததாக அந்த படம் வெளியான நேரத்தில் தனுஷே பில்டப் கொடுத்து வந்தனர். அதேபோல், இப்போது காக்கி சட்டை படமும் மான்கராத்தே வசூலை தாண்டி விட்டதாக ஒரு புதிய பில்டப்பை கொடுத்து வருகிறார்கள்.

ஆனால், முதல் நாளே படம் சரியில்லை என்று இணையதளங்களில் சூறாவளியாய் செய்திகள் பரவின. அதனால் தியேட்டர்களில் கலெக்சனும் குறைந்தது. இந்நிலையில், காக்கி சட்டை வசூல் இல்லை என்று சொன்னால் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் வியாபாரம் பாதிக்கும் என்பதால், இப்போது காக்கி சட்டைதான் சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் கூடுதல் வசூல் செய்த படம் என்று ஒரு புதிய பில்டப் செய்தியை பரவவிட்டிருக்கிறார்கள்.

இந்த செய்தியை சிவகார்த்திகேயனின் ரசிகர்களும், இணையதளங்களில் ஷேர் பண்ணி வருகிறார்கள். ஆனால் இந்த செய்தியை சிவகார்த்திகேயன் தரப்பே வெளியிட்டால் சரியாக இருக்காது என்பதால், காக்கி சட்டை படத்தை வெளியிட்ட எஸ்கேப் ஆர்ட்டிஸ் நிறுவனம் தரப்பில் இருந்தே இந்த செய்தியை புகைய விட்டுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி