செய்திகள் 48 ஆண்டுகளாக தொடர்ந்து கார் ஓட்டும் சாதனை மனிதன்!…

48 ஆண்டுகளாக தொடர்ந்து கார் ஓட்டும் சாதனை மனிதன்!…

48 ஆண்டுகளாக தொடர்ந்து கார் ஓட்டும் சாதனை மனிதன்!… post thumbnail image
நியூயார்க்:-கோர்டன் என்பவர் நியூயார்க் நகரைச் சேர்ந்த ‘75 வயது இளைஞர்‘. வால்வோ கார்களின் அறிவிக்கப்படாத விளம்பர தூதராக உள்ளார். தனது 1966 மாடல் காரில் தான் எல்லா பயணத்தையும் நடத்தி இருக்கிறார். இதுவரை இவர் பயணம் செய்து கடந்த தூரம் 48 லட்சம் கிலோ மீட்டர். கடந்த 48 ஆண்டுகளாக விடாமல் இந்த காரை ஓட்டும் கோர்டன், வாரம் ஒரு முறை 10 நிமிடங்கள் மட்டும் நேரம் ஒதுக்கி காரை கூர்ந்து கவனித்து அதில் உள்ள பிரச்சினைகளை தெரிந்து கொள்கிறார்.

தனது 45 லட்சம் கிலோ மீட்டர் சாதனைக்காக கோர்டன் தேர்ந்தெடுத்தது, அலாஸ்கா. அவர் உலகில் போகாத இடமாக அலாஸ்கா மட்டுமே இருந்தது. அதனால், அவர் தனது முதல் பயணத்தை அங்கிருந்தே தொடங்கினார். இதுவரை 18 நாடுகளில் தனது காரை ஓட்டியுள்ள கோர்டன், தனக்கு மிகவும் பிடித்த நாடாக சுவீடனை சொல்கிறார். 20 லட்சம் மைல்களை கடந்த போதே கோர்டனின் பெயர் கின்னசில் பதிவாகி விட்டது. அப்போதே வால்வோ நிறுவனமும் தன் பங்குக்கு ஒரு ஸ்போர்ட்ஸ் காரை கோர்டனுக்கு பரிசளித்து பெருமைப்படுத்தியது.

இப்போது வரை கோர்டன் தனது காரில் கடந்துள்ள தூரம் உலகத்தை 120 முறை சுற்றி வருவதற்கு சமமான தூரம். இதைப் பற்றி கோர்டனிடம் கேட்டால், எவ்வளவு தூரம் கடந்து இருக்கிறேன் என்பது முக்கியமல்ல. ஒவ்வொரு பயணமும் எனக்கு கற்றுக்கொடுத்தது என்ன என்பதுதான் முக்கியம். என் வால்வோ எனக்கு வாழ்க்கையை வாழ கற்றுக்கொடுத்திருக்கிறது. இன்னும் போக வேண்டிய தூரமும் கற்க வேண்டிய பாடமும் நிறைய இருக்கிறது என்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி