செய்திகள்,தொழில்நுட்பம்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் பிரான்ஸ் விமானம் ஆல்ப்ஸ் மலையில் விழுந்து நொறுங்கியது: 150 பேர் பலி!…

பிரான்ஸ் விமானம் ஆல்ப்ஸ் மலையில் விழுந்து நொறுங்கியது: 150 பேர் பலி!…

பிரான்ஸ் விமானம் ஆல்ப்ஸ் மலையில் விழுந்து நொறுங்கியது: 150 பேர் பலி!… post thumbnail image
பாரிஸ்:-ஜெர்மன்விங்ஸ் விமான நிறுவனத்தின் ஏர்பஸ்-320 என்ற பயணிகள் விமானம் ஸ்பெயின் நாட்டின் கடலோர நகரமான பார்சிலோனாவில் இருந்து ஜெர்மனின் டஸ்சல்டிராப் நகருக்கு புறப்பட்டுச் சென்றது. இதில், 144 பயணிகளும், விமானிகள் உள்ளிட்ட 6 விமான ஊழியர்களும் பயணம் செய்தனர். பிரான்சின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள பனிச்சறுக்கு பகுதி அருகே பறந்துகொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த விமானம் விபத்துக்குள்ளானது.

5000 அடி உயரத்தில் பறந்தபோது அபாய எச்சரிக்கை கிடைத்ததாகவும், அதன்பின்னர் தரைக்கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்து விழுந்ததாகவும் விமான போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். அடர்ந்த மலைப்பகுதியில் விமானம் விழுந்ததால் அதில் பயணம் செய்த 150 பேரும் இறந்ததாக பிரான்ஸ் போக்குவரத்து துறை துணை மந்திரி தெரிவித்தார். அந்த பகுதியை சென்றடைவது மிகவும் கடினம் என்றும் அவர் கூறினார். கடந்த 40 ஆண்டுகளில் நடந்த மிக மோசமான விமான விபத்து இதுவாகும்.

இதற்கிடையே பிரான்ஸ் காவல்துறையின் ஹெலிகாப்டர் சம்பவ இடத்தை நெருங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பனி படர்ந்த அப்பகுதிக்கு சென்று மீட்புப் பணியை மேற்கொள்வது மிகவும் சவாலாக இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது. விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரான்ஸ் பிரதமர் ஹாலண்டே இரங்கல் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி