நடிகர் விஜய் நடிக்கும் ‘புலி’ படத்தின் 5 ரகசியங்கள்!…

விளம்பரங்கள்

சென்னை:-‘கத்தி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் நடித்து வரும் படம் புலி. இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. படம் விஜய்பிறந்தநாளுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பட எதிர்பார்ப்புக்கான 5 முக்கிய காரணங்கள்:

1. புலி படம் மிக பெரிய நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் 100 கோடி செலவில் உருவாகிறது.

2. இப்படத்தில் தளபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் மற்றும் ஹன்சிகா நடிக்கின்றனர். ஸ்ருதி ஹாசன் முதல் முறையாக விஜய் உடன் இணைந்து ஒரு டூயட் பாடல் பாடியுள்ளார்.

3. புலி படத்தில் ஸ்ரீதேவி நடிக்கிறார். இதில் ஹன்சிகா ராணியாகவும், இவருக்கு அம்மாவாக ஸ்ரீதேவியும் நடிக்கின்றனர்.

4. சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகும் அதிக பட்ஜெட் படம்.

5. இப்படத்தில் நான்கு காமெடி நடிகர்களும், ஐந்து பிரபல காஸ்டும் டிசைனர் மற்றும் உலக அளவிலான ஸ்டண்டு மாஸ்டர்களும் இடம் பெற்று உள்ளனர். இவ்வாறு பல சிறப்பு அம்சங்கள் நிறைந்த புலி படம் தளபதி ரசிகர்களுக்கு மிக பெரிய விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: