எனக்கு காதலனே இல்லை – நடிகை ஸ்ருதிஹாசன்!…

விளம்பரங்கள்

சென்னை:-உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல், பல படங்களில் பாடல்களை பாடுவதையும் வழக்கமாக செய்து வருகிறார்.

சமீபத்தில் ஸ்ருதிஹாசனிடம் திருமணம் பற்றி கேட்ட போது மனம் திறந்து பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, எனக்கு காதலர் இல்லை, அதனால் உடனேயே திருமணம் செய்து கொள்ள வாய்ப்பில்லை. 6 ஆண்டுகளுக்கு பிறகு தான் திருமணம் பற்றி யோசிக்க வேண்டும். நான் இன்னும் நிறைய வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். எனது ரசிகர்கள் என் நடிப்பை பார்த்து வெறுக்கும் வரை நான் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: