புத்தாண்டில் ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் நடிகர் விஜய்!…

விளம்பரங்கள்

சென்னை:-சிம்புதேவன் இயக்கிவரும் ‘புலி’ படம் வேகமாக வளர்ந்து வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா நடித்து வருகின்றனர். ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இப்படம் ராஜா காலத்து கதை என்பதும், விஜய் இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடித்துவருவது நாம் அனைவரும் அறிந்ததுதான். இப்படத்தில் விஜய்யின் கேரக்டரில் திடீர் திருப்பம் வந்துள்ளது.

இப்படத்தில் ஒரு விஜய் நிகழ்காலத்தில் வாழும் மருத்துவ கல்லூரி மாணவராகவும் மற்றொரு விஜய் முன் ஜென்மத்தில் சேனாதிபதியாகவும் இருப்பது போன்று கதை அமைக்கப்பட்டுள்ளதாம். இதுவரை இரட்டை வேட படங்களில் பெரிதாக மாற்றம் செய்யாத விஜய், இந்த படத்தில் வித்தியாசம் காட்ட குரலை மாற்றி நடித்துள்ளார். படத்தில் வாள் சண்டை இருப்பதால் தற்போது அதற்கும் பயிற்சி எடுத்து வருகிறார். இது மட்டுமின்றி குங்பூ சண்டைக்காட்சிகளும் படத்தில் உள்ளதாம்.

இதற்காக தாய்லாந்தில் இருந்து சிறப்பு சண்டை நிபுணர்களை வரவழைத்து விஜய் பயிற்சி பெற்று வருகிறார் என்பது நாம் அறிந்ததே. இப்படத்திற்கு டைட்டிலை தவிர, வேறு ஒரு போஸ்டர் கூட இன்னும் வெளிவரவில்லை. இந்நிலையில் சமீபத்தில் வந்த தகவலின் படி, இப்படத்தின் பர்ஸ்ட் லுக் அடுத்த வாரத்தில் வரவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சித்திரை முதல் நாள், படத்தின் டீசர் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: