அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் ராஜபக்சே கொள்ளையடித்த பணத்தை மீட்க இந்தியா, அமெரிக்கா உதவி!…

ராஜபக்சே கொள்ளையடித்த பணத்தை மீட்க இந்தியா, அமெரிக்கா உதவி!…

ராஜபக்சே கொள்ளையடித்த பணத்தை மீட்க இந்தியா, அமெரிக்கா உதவி!… post thumbnail image
கொழும்பு:-இலங்கையில் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜ பக்சேயும் அவர் குடும்பத்தினரும் அரசாங்க சொத்துக்களை கொள்ளையடித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.அப்படி கொள்ளையடித்த பணத்தில் ரூ.15 ஆயிரம் கோடியை மகிந்த ராஜபக்சே வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளதாக இலங்கையில் உள்ள அரசியல்வாதிகள் கூறி வருகிறார்கள். ராஜபக்சே கொள்ளையடித்த பணத்தை மீட்டு மீண்டும் அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும் என்றும் இலங்கையில் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியபடி உள்ளனர். இதையடுத்து ராஜபக்சே பதுக்கியுள்ள பணத்தை மீட்க புதிய ஜனாதிபதி சிறிசேனா நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதற்காக அவர் இந்தியா, அமெரிக்கா நாடுகளின் உதவியை நாடியுள்ளார். இந்த நாடுகளின் புலனாய்வுத்துறை அதிகாரிகள் இந்த விஷயத்தில் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.
எனவே மகிந்த ராஜபக்சே பதுக்கியுள்ள பணம் பற்றிய விவரம் விரைவில் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே மகிந்த ராஜபக்சேயின் தம்பி பசில் ராஜபக்சேதான் நிறைய அரசு பணத்தை கொள்ளையடித்து இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. அவர் தேர்தலில் தோல்வி ஏற்பட்டதும் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார்.

அவரை கைது செய்ய வெளிநாடுகளில் இலங்கை அரசு தேடி வருகிறது. தற்போது அவர் வியட்நாம் நாட்டில் பதுங்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது. அவரை கைது செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையே மகிந்த ராஜபக்சேக்கு கொடுக்கப்பட்டு வந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இலங்கையின் பிரதமர் பதவியை கைப்பற்றும் முயற்சிகளில் மகிந்த ராஜபக்சே தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி